கல்பாக்கம் அணு விஞ்ஞானியுடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்
நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அணு உலை மாதிரி செயல் விளக்கம்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விஞ்ஞானியாக மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுங்கள் என பள்ளி மாணவர்களிடம் கல்பாக்கம் அணு விஞ்ஞானி ஜலஜா மதன் மோகன் பேசினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்பாக்கம் அணு விஞ்ஞானி மற்றும் பொது விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பிரிவு ,தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஜலஜா மதன் மோகன் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்பதை மாதிரி அணு மின் நிலையம் அமைத்து அது செயல்படும் விதத்தை செயல் விளக்கத்துடன் மாதிரி மூலமாக விளக்கினார்.
மின்சாரத்தின் இன்றைய தேவை
மாணவர்கள் ஜெகதீஸ்வரன் ,முனிஸ்வரன் , ஆகாஷ் குமார் மாணவிகள் தனம்
,தனலெட்சுமி உட்பட பல மாணவ,மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து
அவர் பேசுகையில்,மின்சாரமானது நீராவி ,சூரிய ஒளி
,காற்றாலை,அணுசக்தி,நிலக்கரி என பல வகைகளில் இருந்து உற்பத்தி
செய்யபடுகிறது. வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாராம் நீர்,காற்று,உணவு
போன்றவை.அதை விட முக்கியமாக நான்கவதாக மின்சாரம் தேவைப்படும் சூழ்நிலை
உருவாகிவிட்டது .மின்சாரம் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையில்
அதனுடைய உற்பத்தியைப் பெருக்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளோம்.மனிதன் ஒரு வேலையை செய்யும் நேரத்தில் மின்சாரத்தால்
இயங்கக் கூடிய கருவிகள் 100 வேலைகளைச் செய்யும்.உலகளவில் அமெரிக்கா போன்ற
நாடுகள் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து முன்னணியில் உள்ளன.ஆகவே
நாமும் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
அணு உலை மாதிரி செயல் விளக்கம்
அணு உலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து யுரேனியம் நீராவியனது டர்பைன் ப்லேடில் பட்டு பேன் சுற்றுவது போல் சுற்றி சுற்றி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.அணுவைப் பிளக்க வெப்ப சக்தி அதிகம் தேவைப்படுவதால் சோடியம் வழியே வெளியே எடுக்கிறோம்.நியுட்ரான் என்பது கேரம் போர்டில் உள்ள ஸ்டிக்கரை போன்றது. நியுட்ரான் கொண்டு அணுவை அடித்தால் அது அடுத்த அணுவில் போய் அடித்து மூன்றாகி அது அடுத்த அணுவில் அடித்து பல அணுக்களாகி மின்சாரம் பெறப்படுகிறது.சங்கிலித் தொடர் போல் இச் செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று மின்சாரம் கிடைக்கிறது.
கல்பாக்கம் ஒரு அறிமுகம்
கல்பாக்கம் இங்கு 21 அணு உலைகள் உள்ளன.4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.சுற்றுப்புறத்தை பாதிக்காமல் இங்கு மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது.அணு உலைகள் நான்கு ,ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொண்டதாக
அமைக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் பிற்காலத்தில் அறிவியல் விஞ்ஞானி ஆக வந்து
நம் நாட்டுக்கு பணி புரியுங்கள்.அறிவியலில் அதிக ஆர்வம் காட்டி நிறைய
ஆராய்ச்சி செய்து புதியனவற்றை கண்டுபிடிக்க இந்த வயதிலியே சபதம் எடுத்து
கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி
கூறினார்.
பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க நடுநிலைப் பள்ளியில் கல்பாக்கம் அணு விஞ்ஞானி ஜலஜா மதன் மோகன் மாணவ,மாணவியருக்கு அணு உலை மாதிரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அணு உலை மாதிரி செயல் விளக்கம்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விஞ்ஞானியாக மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுங்கள் என பள்ளி மாணவர்களிடம் கல்பாக்கம் அணு விஞ்ஞானி ஜலஜா மதன் மோகன் பேசினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்பாக்கம் அணு விஞ்ஞானி மற்றும் பொது விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பிரிவு ,தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஜலஜா மதன் மோகன் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்பதை மாதிரி அணு மின் நிலையம் அமைத்து அது செயல்படும் விதத்தை செயல் விளக்கத்துடன் மாதிரி மூலமாக விளக்கினார்.
மின்சாரத்தின் இன்றைய தேவை
அணு உலை மாதிரி செயல் விளக்கம்
அணு உலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து யுரேனியம் நீராவியனது டர்பைன் ப்லேடில் பட்டு பேன் சுற்றுவது போல் சுற்றி சுற்றி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.அணுவைப் பிளக்க வெப்ப சக்தி அதிகம் தேவைப்படுவதால் சோடியம் வழியே வெளியே எடுக்கிறோம்.நியுட்ரான் என்பது கேரம் போர்டில் உள்ள ஸ்டிக்கரை போன்றது. நியுட்ரான் கொண்டு அணுவை அடித்தால் அது அடுத்த அணுவில் போய் அடித்து மூன்றாகி அது அடுத்த அணுவில் அடித்து பல அணுக்களாகி மின்சாரம் பெறப்படுகிறது.சங்கிலித் தொடர் போல் இச் செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று மின்சாரம் கிடைக்கிறது.
கல்பாக்கம் ஒரு அறிமுகம்
கல்பாக்கம் இங்கு 21 அணு உலைகள் உள்ளன.4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.சுற்றுப்புறத்
பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க நடுநிலைப் பள்ளியில் கல்பாக்கம் அணு விஞ்ஞானி ஜலஜா மதன் மோகன் மாணவ,மாணவியருக்கு அணு உலை மாதிரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
No comments:
Post a Comment