தேவகோட்டை ராமாயண சத்சங்கத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நிகழ்ச்சி
தேவகோட்டை -செப்.தேவகோட்டை ராமாயண
சத்சங்கத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் இராமாயணம் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேவகோட்டை சத்சங்கம் சார்பில் அருசோ நீலா அரங்கில் 21ம்
ஆண்டாக கவிஞர் அருசோமசுந்தரம் இராமாயணம் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு ஜமீன்தார் சோம.நாராயணன் செட்டியார் தலைமை தங்கினார்.காசி ஸ்ரீ காசிநாதன் வரவேற்றார்.கவிஞர் உமா சுப்பையா தொடங்கி வைத்தார்.சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பள்ளி மாணவ,மாணவியரின் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் பற்றி அறிமுக உரை நிகழ்த்தினார்.சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் இராமாயணம் பற்றி நாடகம்,நடனம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தினர்.கவிஞர் அரு சோம சுந்தரம் கைகேயி வரம் பற்றி உரை ஆற்றினார்.பேராசிரியர் சுப்பையா நன்றி
கூறினார்.
பட விளக்கம் : IMG-1981,1983 தேவகோட்டை ராமாயண
சத்சங்கத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் கைகேயி ,தசரதனாக இராமாயணம் நாடகத்தில் நடித்தனர்.
பட விளக்கம் : IMG-1974 தேவகோட்டை ராமாயண
சத்சங்கத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் இராமாயணம் தொடர்பான வில்லு பாட்டு நிகழ்ச்சி நடத்தினர்.
பட விளக்கம் : IMG-1989 தேவகோட்டை ராமாயண
சத்சங்கத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் இராமாயணம் தொடர்பான பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.
பட விளக்கம் : IMG-1996 தேவகோட்டை ராமாயண
சத்சங்கத்தில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பட்டி மன்றம் நடத்தினார்கள்.
No comments:
Post a Comment