நடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா
தேவகோட்டை - ஏப்ரல் -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் 7ம் வகுப்பு மாணவர் ர.நவீன்குமார் வரவேற்புரை வழங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தங்கினார்.மாநில அளவில் தேசிய ஆற்றல் துறை சார்பாக "தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு" என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களை தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கியின் முதன்மை மேலாளர் என்.சபாரெத்தினம் வழங்கி வாழ்த்தி பேசுகையில்,மாணவர்கள் வரும் காலத்தில் பெரிய பதவிகளுக்கு வருவதற்கு தொடக்க நிலை கல்வியிலே அடித்தளமிட வேண்டும் என்று காமராசர்,காந்தி மகான்,பாரதி ஆகியோரின் வாழ்கை வரலாறுகளை எடுத்து கூறி விளக்கமாக மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூறினர்.இப்போட்டிகள் இரண்டு பிரிவாக நடை பெற்றதில் அ பிரிவில் 6ம் வகுப்பு மாணவி தனம் முதல் பரிசையும் ,அதே வகுப்பை சார்ந்த முனீஸ்வரன் இரண்டாம் பரிசையும்,ஆ பிரிவில் 7ம் வகுப்பு மாணவி சி .சொர்ணாம்பிகா முதல் பரிசையும் ,அதே வகுப்பு மாணவி கிருஷ்ணவேணி இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
மாநில அளவில் மத்திய நீர்வாரியம் சார்பாக நடைபெற்ற "நீரை சேமிப்போம் வரும்காலம் காப்போம்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் கலந்துகொண்டோருக்கான சான்றிதழ்களை தேவகோட்டை தமிழ்நாடு மின்சாரவாரியாதிலிருந்து ஓய்வு பெற்ற என்.காசிநாதன் வழங்கி பேசுகையில் ,மாணவர்கள் வாழ்க்கையில் குறிகோளுடன் வாழ்வதற்கு பழகி கொள்ள வேண்டும் என பேசினார்.இப்போட்டிகளில் 7ம் வகுப்பு மாணவி மங்கையர்க்கரசி முதல் பரிசையும் ,6ம் வகுப்பு மாணவி தனம் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.விழாவில் மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளியில் நடந்த நிகழ்வுகளை 7ம் வகுப்பு மாணவி எம்.துர்கா எடுத்து கூறினார்.முதல் வகுப்பு மாணவி கீர்த்தியா தனது மழலை மொழியில் விழா தொடர்பாக பேசினார்.நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துலெட்சுமி செய்திருந்தார்.விழாவின் நிறைவாக 7ம் வகுப்பு மாணவி பவனா நன்றி கூறினார்.

படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நாடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் தேவகோட்டை பாண்டியன் கிராம வங்கியின் முதன்மை மேலாளர் என்.சபாரெத்தினம் வாழ்த்தி பேசுகையில் எடுத்த படம் .உடன் என்.காசிநாதன்,தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
No comments:
Post a Comment