அன்பு இரண்டு வகைப்படும் மெல்லிய அன்பு -கடின அன்பு என தன்னம்பிக்கை பயற்சியாளர் நெல்சன் மாணவர்களக்கு அறிவுரை
தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை குறித்த கருத்தரங்கு நடந்தது.தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.அ .காளீஸ்வரி முன்னிலை வகித்தார். 7ம் வகுப்பு மாணவன் நடராஜன் வரவேற்றார்.நெல்சன் மாணவர்களிடம் பேசியதாவது:போராட்டம் என்பதுதான் வாழ்க்கை.அதில் போராடி வெற்றி பெறுபவனே வெற்றியாளன்.தாய் ,தந்தை,ஆசிரியரே கடவுள்.அவர்கள் எண்ணம் போல் வாழ்ந்தால் நம் வாழ்க்கை சிறப்புடன் அமையும்.தன்னம்பிக்கை முக்கியம்.மாணவர்களாகிய நீங்கள் கதை பேசாது,கவனம் சிதறாது,சினிமா,தொலைகாட்சிகள் பார்ப்பதை தவிர்க்கவேண்டும்.வீட்டில் பெற்றோர் பேச்சையும்,பள்ளயில் ஆசிரயர் பேச்சையும் மதித்து நடக்கவேண்டும்.அன்பில் இரண்டு வகை உள்ளது.மெல்லிய அன்பு.கடின அன்பு.நாம் படிக்கும் சமயம் ஆசிரயரும்,பெற்றோரும் அளிப்பது .இந்த இரண்டையும் ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்வது தான் வாழ்க்கை .மாணவர்களாகிய நீங்கள் பொய் சொல்வதை தவிர்க்கவேண்டும்.தவறு செய்வதில் இருந்து தன்னை திருத்திக்கொள்ளவேண்டும்.காதல் இரண்டு வகைப்படும்.ஒன்று இதயகாதல்.மற்றொன்று இச்சைகாதல் . இதயகாதல் நம் பணியில் சிறப்பை காட்டும் .பிரச்சனை இருக்காது.இச்சைகாதல் ஆடம்பர வாழ்க்கையை குறிக்கும்.பல மாய மனிதர்களை தாண்டி தான் நாம் பள்ளிக்கு வருகிறோம்.கனி கொடுக்கும்.கனிகொடுக்கும் தனிமரம் தோப்பாகும்.வாழ்க்கையில் சாதித்தவர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் பெற்றோரையும் ஆசிரியரையும் போற்றி வணங்குபவர்கள் தான் சாதனையாளர்களாக உள்ளனர்.அன்னை தெரசா முதல் அப்துல்கலாம் வரை எண்ணற்ற சாதனையாளர்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.ஊனமுற்றவன் மாற்றுதிரனாளி என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.நான் மாற்று மனிதன்.என்னிடம் ஊனம் என்ற சிந்தனையே கிடையாது.என்று நெல்சன் பேசினார்.மாணவிகள் சொர்ணம்பிகா ,மங்கையர்க்கரசி,சௌமியா,காயத்ரி,அறபுதுராஜ் ,சண்முகநாதன்,பரமேஸ்வரி,ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு அதற்கு பதில் அறிந்தனர்.8ம் வகுப்பு மாணவன் வல்லரசு நன்றி கூறினார்.
பட விளக்கம்:
0104-தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தன்னம்பிக்கை பயற்சியாளர் நெல்சன் பயற்சி அளித்தபோது எடுத்த படம் உடன் பள்ளி தலைமை ஆசிரயர் லெ .சொக்கலிங்கம் மற்றும் காளீஸ்வரி.
0108:தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தன்னம்பிக்கை பயற்சியாளர் நெல்சன் பயற்சி அளித்தபோது எடுத்த படம்
உடன் காளீஸ்வரி.
0121:தேவகோட்டை சேர்மன் மணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தன்னம்பிக்கை பயற்சியாளர் நெல்சன் பயற்சி அளித்தபோது 5 ம் வகுப்பு மாணவி கார்த்திகா பேசிய போது எடுத்த படம் உடன் பள்ளி தலைமை ஆசிரயர் லெ .சொக்கலிங்கம் மற்றும் காளீஸ்வரி.
No comments:
Post a Comment