சேர்மன் மாணிக்க வாசகம்
நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு கவனகக் கலை இளவல் –திருக்குறள் திலீபன் வருகைபுரிந்தார்,இவருடன் பள்ளி மாணவ மாணவிகள் சந்தித்து பல்வேறு கவனகக் கலை பற்றியும்,நினைவாற்றல் குறித்தும் விளக்கம் கேட்டனர்,முன்னதாக திலீபன் சிறப்புரையாற்றினார்.திருக்குறள் நான் சிறுவயது முதல் கற்றேன் . எனது பெற்றோர் எனக்கு ஊக்கமளித்து இத்துறைக்கு என்னை வழிகாட்டிச்சென்றனர்,கவனகக் கலை நினைவாற்றலைப் பெருக்கும் மனதும்,உணர்ச்சியும் தனித் தனியாக நமக்கு வழிகாட்டும்.ஆனால் மனது சொல்படிதான் நாம் நடக்க வேண்டும்.அப்போதுதான் வெற்றியடைய முடியும், திருக்குறள் பயிற்சி அனைவரும் பெறவேண்டும்.என்னச்சிரப்புரை ஆற்றினார்.மேலும் மாணவர்கள் திருக்குறள் பற்றிய சந்தேகங்களை எண்கள் கூறியும்,அதிகாரம் கூறியும் கேட்டனர்.சரியான திருக்குறளை திலீபன் எடுத்துக் கூறினார். கல்வி,அறிவுடைமை,ஒழுக்கமுடைமை, அடக்கமுடைமை, வான்சிறப்பு,போன்ற அதிகரங்கங்களில் இருந்தும் மாணவர்கள் வினாக்கள் கேட்டு திலீபன் சரியான பத்தி சொன்னது கண்டு வியந்தனர்.மேலும் இரண்டு உதடுகளுக்கு நடுவில் குண்டுசியை வைத்து உதடுகள் ஒட்டாமல் திருக்குறளை கூறி அசத்தினான் திருக்குறள் திலீபன் . இருபது வரிசை எங்களை வரிசைபடுத்தி மாணவர்கள் பெயர்களை கூறச்செய்து அதை வரிசைபடுத்தியும் தலை கீழாகவும்,கேட்ட எண்,பெயர்களையும்,திலீபன் கூறி நினைவாற்றல் குறித்து விளக்கமளித்தார். மாணவர்கள் நடராஜன்,சொர்ணாம்பிகா,சுபலட்சுமி,ஜீவா,ரத்னா,நவீன், சிவகுமார்,மணிகண்டன் ,வினாக்கள் கேட்டும் பாராட்டி பேசியும் பயனுடையதாய் அமைந்தது, பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment