Thursday, 19 July 2018

ஆளுமை பயிற்சி முகாம் 

உணர்ந்து செய்தலே பொறுப்பு - பயிற்சியாளர் பேச்சு 

நம்மை யாரும் பார்க்கவில்லை என்று செய்வது தான் தவறு 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆளுமை பயிற்சி முகாமில் பொறுப்புணர்ச்சி தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
                                 பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் நான்ஸி அகம் ஐந்து புறம் ஐந்து என்கிற தலைப்பில் பொறுப்புணர்ச்சி தொடர்பாக விளையாட்டு முறையில் செயல்பாடுகள் செய்து மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் புரியும் வகையில் விளக்கினார்.நான்,வீடு,பள்ளி,நண்பர்கள்,சமுதாயம் என்கிற ஐந்து குழுக்கள் பிரிக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு சமுதாயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக விளையாட்டு வழியாகவும் பொறுப்புணர்ச்சி புரிய வைக்கப்பட்டது.பலூனில் தண்ணீர் ஊற்றி அதனை கட்டி கடைசி வரை விளையாட்டில் தண்ணீர் வெளியே வராமல் தூக்கி போட்டு பிடிக்க செய்து பொறுப்புணர்ச்சி என்பது சொல்லப்பட்டது.மாணவர்கள் காயத்ரி,சபரி,சிரேகா ,காவியா,அய்யப்பன் ,கார்த்திகேயன் ஆகியோர் பொறுப்புணர்ச்சி தொடர்பாக தங்களின் கருத்துக்களை சொன்னார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆளுமை பயிற்சி முகாமில் பொறுப்புணர்ச்சி தொடர்பாக பயிற்சி அளித்த மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் நான்சி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.

No comments:

Post a Comment